போக்கிரி பொங்கல்- மலேசியாவில்!

Ilaya Thalabathay Vijay with Ashin in Pokkiry"அட, இந்த படத்துல அசின் இருக்காப்லயா?" என கேட்ட நண்பருடன் சேர்ந்து ஜொல்லியபடியே, கோலாலம்பூர் கொலோசியம் தியேட்டரின் உள்ளே நுழைந்தேன்!

வருங்கால 'டமிலக முதல்வர்கள்' என கன்பார்ம் செய்யப்பட்ட கோலிவுட் ஹீரோக்களின் பட விதியையும் மீறி, ஹீரோயின், (அட நம்ம அசின்தானுங்க) படம் முழுக்க வருகிறார். கூடவே நடிக்கவும் சில இடங்களில் வாய்ப்பு. அதுக்காக டைரக்டர் பிரபுதேவாவுக்கும், இளைய தளபதிக்கும் 'உங்கள்' சார்பா என் நன்றி. இது தான் படத்தோட முக்கிய +னு நான் நினைக்கின்றேன். (ஹிஹி..)

இன்னுமொரு ரவுடி Vs போலீஸ + முஸ்லீம் தேச துரோகி (விதிவிலக்கா இந்த படத்துல நேர்மையான போலீஸ் கமிஷனர் பாத்திரமும் ஒரு முஸ்லீம் - கலாம் எப்பெக்டா?) + அப்புறம் ஒரு அழகான அபலை பெண் என இப்போதைய ட்ரெண்டுக்கான படம். என்ன, இந்த படத்துல அபலை பெண்ணா, அநியாத்துக்கு அழகான நம்ம அசினை போட்டு எடுத்துருக்காங்க. அதுக்குன்னே மீண்டும் ஒரு முறை மேற்படி இரண்டு பேருக்கும் ஒரு நன்றி போட்டுக்கலாம்.(ஹிஹி)

இதுக்கு மேல படத்தை பத்தி சொல்லவோ, விமர்சனம் பன்னவோ எனக்கு சினிமா ஞானம் பத்தாதுன்றதால, விமர்சனமா இல்லாம, எனக்கு தோனுறத எழுதிருக்கேன். அதுனால, இதெல்லாம் ஒரு விமர்சனான்னு விமர்சிக்காம மேல படிங்க.

இரசிச்சது:

1. கவனிச்சதுல, மலேசிய தமிழர்களிடம் நல்ல ரசனை இருக்கிறது - அசின் வரும் காட்சிகளுக்கு அவர்கள் தரும் வரவேற்பே அதற்கு சாட்சி (ஹிஹி..)

2. விஜய்க்கு, ஆண்களைவிட பெண் இரசிகர்களே அதிகம். மிளகாய் விண்ணில் தெறிக்க Ashin learning to whistle from the tamil movie Pokkiry
காரமாய் விஜய் அறிமுகமாகும் காட்சியில், விசில் சத்ததை விட, வீலிடும் பெண்களின் குரலே அதிகம் கேட்கிறது. (பெண்கள்னா விசிலடிக்க மாட்டாங்களான்னு கேட்பவர்களுக்கு, விசிலடித்து ஆட்டோ கூப்பிடும் விஜயிடம், அசின் "எப்படி" என கேட்க, நாக்கை மடக்க சொல்லி, அசின் வாயில் தன் விரலை வைத்து விசிலடிக்க சொல்லி தரும் காட்சியே சாட்சி.)

3. சொன்னா நம்புங்க, விஜயைவிட அதிக வரவேற்பை பெற்றவர், இம்சை அரசன் வடிவேல் :)

4. எல்லாத்தையும் தூக்கி சாப்புடுறாரு, 'டேய் செல்லம்' பிரகாஷ்ராஜ்! ஹீரோ லெவலுக்கு கைதட்டல் வாங்குறாரு அறிமுக காட்சியிலேயே!

அது மட்டுமில்ல, பர்பாமென்சுலயும் பின்றாரு. அதுலயும், அவரை புடிச்சு உள்ள வெச்சு, "இவனுக்கு சாப்பாடு பிரியாணி, சிக்கன், மட்டன், என்ன வேணும்னாலும வாங்கி் கொடுங்க. தூங்க மட்டும் விடாதிங்க. தூங்கினான்னா உடனே அடிங்க" ன்னு கமிஷனர் நெப்போலியன் சொல்லிவிட்டு போக, பிரகாஷ்ராஜ் தூங்குவாரான்னு குண்டாந்தடியுடன் போலீஸ் அவரை சுத்தி நிக்க, தூங்கிவிடாமல் (அடி விழாமல்) இருக்க பிரகாஷ் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் தியேட்டரை குழுக்கி எடுக்கிறது.

விஜய்கிட்ட செமயா வாங்கி, இரத்தம் வழிய வழிய தள்ளாடியபடியே, பிரகாஷ் ராஜ் "டேடேடேய் செல்லம்" எனும் காட்சி - அதெல்லாம் பார்த்து ரசிக்கனும்ங்க!

6. அப்புறம், நாசர் தனக்கு கெடச்ச சின்ன ரோலை வழக்கம் போல நல்லா செஞ்சிருக்கார்.

7. பீடா + அசின் மேல ஜொள்ளூ வடிய வரும் அந்த 'காவாளி' போலீஸ் இன்ஸ்பெகடர். (யாருனு தெரியலே)

8. பாடல்களில், சாதி கொடுமை குறித்த சாடல் - ஒத்தை வரியாகவேனும் - மற்றும் பெண்கள் / குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராய் - உற்று கவனிககாவிட்டால் தவறவிடப்படும் அளவிலேனும் - ஒரு தமிழ் ஹீரோ பேசுவது. [பெண்களுக்கெதிரான வன்முறையை ஹீரோயிசமாக காட்டிய சூப்பர் ஹீரொக்கள் நிரைந்த தமிழ் திரை உலகில் இது சிறு புரட்சித்தான்]

9. 'வசந்த முல்லை போல வந்து அசைந்து ஆடும் வென்புறாவே' ரீமிக்ஸ் பாடல் + காட்சியாக்கிய விதம்.

எரிச்சலாகியது:

-1. வில்ல்ன் கூட்டத்தில வரும் 'கவர்ச்சி' பெண். என்னவோ(?) பண்ணபோராருன்னு பில்டப்பு கொடுத்து கடைசிவரை ஒன்னும் பண்ணாமலே செத்துபோரார். (ஆமா, அவரு யாருங்க?)

-2. துப்பாக்கி, தோட்டா, இரத்தம்னு பிரேம் / பிரேம் எக்கச்சக்க வன்முறை.

-3. வில்லனை தாவுத இப்ராகிம் க்ளோன் ஆக்கி வரும் 19991வது தேசபக்தி படம். :)

-4. பிரண்ட்ஸ் கூட்டனி இல்லாத விஜய் படமே வராதா?

-5. வில்லன் ஆட்கள் 20 பேரா போனாக்கூட, முதல்ல ஒருத்தர் மட்டும் போய் ஹீரோகிட்ட அடி வாங்கி விழும் வரை மற்றவர் காத்திருந்த் போய் தனி தனியா அடி வாங்கும் 'ஒழுங்கு முறை' இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம்மவர்களால் இரசிக்கப்படும்?

--6ஹீரோயின் உடை - அசின் காஸ்ட்யூம் படு திராபை. 'மாம்பழமாம் மாம்பழம்' பாடலில் வருவம் இரண்டு உடை தவிர வேறு காட்சிகளில் அம்மனியின் உடைகள் எதுவும் சிலாகிக்கும் படியாய் - அசினின் இயல்பான அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இல்லை. :(

ஆக மொத்தத்துல, பெரிசா சிலாகிக்க முடியலேனாலும் கூட, சிரித்து இரசிக்க முடிஞ்சது.

நேரமும் வாய்ப்பும் கெடைச்சால் நீங்களும் போய் படத்தை (முக்கியமா அசினை) பார்த்துட்டு நாலு வரி பதிவாக போடுங்களேன்.

அப்புறம் முக்கியமா - எல்லோருக்கும் எல்லா நலமும் கிட்டிட, தமிழர் திருநாளாம் 'பொங்கல்' வாழ்த்துக்கள்.

16மறுமொழிகள்:

Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

இது ஒரு சுய சோதனை 'சொறி'யல் நண்பர்களே, பொருத்தருள்வீர்களாக. :)

Saturday, January 13, 2007 11:04:00 AM  
Blogger ILA(a)இளா மொழிந்தது...

ஆக மொத்தம் விஜய்க்கு இன்னொரு ஆதின்னு சொல்லுங்க. அடப்பாவமே

Saturday, January 13, 2007 11:09:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

ILA(a)இளா,
முதல் முறையா இப்போத்தான் இங்கே வறீங்க. நன்றி.

//ஆக மொத்தம் விஜய்க்கு இன்னொரு ஆதின்னு சொல்லுங்க. அடப்பாவமே//

நான் ஆதி பாக்கலீங்க. :( ஆனா அது விஜய்க்கு ஊத்திக்கின படம்னு மட்டும் தெரியும்.

ஆனா போக்கிரி கில்லி மாதிரி விறுவிருப்பா போகுதுங்களே. ஏற்கனவே தெலுங்குல நல்லா போயி பிரபுதேவாவுக்கு பெரிய பிரேக் கொடுத்திருக்கு. இங்க என்னாவுதுன்னு பார்க்கலாம்!

(விவசாயிக்கு) பொங்கல் வாழ்த்துக்கள்!

Saturday, January 13, 2007 11:24:00 AM  
Blogger ILA(a)இளா மொழிந்தது...

//ஏற்கனவே தெலுங்குல நல்லா போயி பிரபுதேவாவுக்கு பெரிய பிரேக் கொடுத்திருக்கு. இங்க என்னாவுதுன்னு பார்க்கலாம்!

(விவசாயிக்கு) பொங்கல் வாழ்த்துக்கள்!//
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பிரபுதேவாவுக்காவது இந்தப் படம் வெற்றியடைய நான் விரும்புறேங்க. ஆனா தமிழ் சினிமாவுல மசாலாக்கள் ஊசிப்போகனும்னு நினைக்கிறேன்.
கில்லி மாதிரி வேகம்னா, அது வெற்றிப்படமாத்தான் இருக்கனும்.

Saturday, January 13, 2007 11:43:00 AM  
Blogger theevu மொழிந்தது...

// கவனிச்சதுல, மலேசிய தமிழர்களிடம் நல்ல ரசனை இருக்கிறது - அசின் வரும் காட்சிகளுக்கு அவர்கள் தரும் வரவேற்பே அதற்கு சாட்சி (ஹிஹி..)//

:)

Saturday, January 13, 2007 4:45:00 PM  
Anonymous .:: MyFriend ::. மொழிந்தது...

அப்போ நான் நினைத்தது சரிதான்.. ;-)

உங்க விமர்சனத்தை படித்தால், படம் அக்மார்க் தெலுங்கு காப்பிதான்..

Saturday, January 13, 2007 6:29:00 PM  
Anonymous .:: MyFriend ::. மொழிந்தது...

படம் அசின்காக மட்டுமே (ஏதோ ரொம்ப ஃப்ரீயா இருந்தால் மட்டுமே) பார்க்கலாம்னு நினைத்தேன்.

ஆனால், நம்ம செல்லம் கலக்கிட்டார்ன்னு சொல்றீங்க.. அவருக்காகவும் பார்க்கலாம் படத்தை.

Saturday, January 13, 2007 6:30:00 PM  
Anonymous .::MyFriend ::. மொழிந்தது...

பிரபு தேவா நுவ்வேஸ்தானன்தே நெடோனன்தா-ன்னு அருமையா ஒரு படம் எடுத்து நல்ல பெயரை சம்பாதித்தார். அதை ராஜா தமிழில் ஜெராக்ஸ் எடுத்து தன் பெயரை கெடுத்துக் (படம் தமிழில் நன்றாகவே ஓடியது. ஆனாலும், சொந்த சரக்கு இல்லை)கொண்டார். இப்போ பிரபு தேவாவும் தன் தலையில் மண்ணை வாறி போட்டுக் கொண்ட கதையாய் அல்லவா இருக்கு!

Saturday, January 13, 2007 6:33:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

//ஏற்கனவே தெலுங்குல நல்லா போயி பிரபுதேவாவுக்கு பெரிய பிரேக் கொடுத்திருக்கு. இங்க என்னாவுதுன்னு பார்க்கலாம்!//

தெலுங்கில் போக்கிரியை இயக்கியவர் பிரபுதேவா இல்லை.பிரபுதேவா தெலுங்கில் இரண்டு படம் மட்டுமே இயக்கியுள்ளார்.முதல் படம் ஹிட்.இரண்டாவது படமான பௌர்ணமி சரியாகப் போகவில்லை.

Saturday, January 13, 2007 8:20:00 PM  
Blogger மு.கார்த்திகேயன் மொழிந்தது...

நல்ல விமர்சனம் வணக்கத்துடன்.. முதல் முறை இங்கே.. உங்கள் பதிவு ரசிக்க வைக்கிறதுங்க..

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Saturday, January 13, 2007 11:17:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

வாங்க தீவு,
உங்கள் முதல் வருகைக்கும், சிரிப்பானுக்கும் நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்!

Sunday, January 14, 2007 12:25:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

ஆகா .:: My Friend ::.,
நீங்களும் மலேசியாலதான் இருக்கீங்களா. விடுங்க, இன்னும் ஒரு ரெண்டுபேர் மட்டும் இங்க கெடைச்சுட்டாங்கன்னா, 'உலக வலைபதிவர் வரலாற்றில் முதன் முறையா, நாமளும் இங்கே ஒரு வலைபதிவர் மாநாடு (?) ஒன்னை போட்டு போண்டாவோடயோ இல்ல டைகரோடவோ கொண்டாடிடுவோம் :)

Sunday, January 14, 2007 12:37:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

>>
//ஏற்கனவே தெலுங்குல நல்லா போயி பிரபுதேவாவுக்கு பெரிய பிரேக் கொடுத்திருக்கு. இங்க என்னாவுதுன்னு பார்க்கலாம்!//

தெலுங்கில் போக்கிரியை இயக்கியவர் பிரபுதேவா இல்லை.பிரபுதேவா தெலுங்கில் இரண்டு படம் மட்டுமே இயக்கியுள்ளார்.முதல் படம் ஹிட்.இரண்டாவது படமான பௌர்ணமி சரியாகப் போகவில்லை.
<<

தகவலுக்கு நன்றி அனானி. இதை சொல்ல பேரோட வரக்கூடாதா? :) பொங்கல் வாழ்த்துக்கள்!

Sunday, January 14, 2007 12:41:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

வாங்க கனவுலகம் கார்த்தி,
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் (என்னவச்சு காமடி கீமடி பண்ணலி்யே? :) நன்றி.
பொங்கல் வாழ்த்துக்கள்.

Sunday, January 14, 2007 12:46:00 AM  
Blogger வைசா மொழிந்தது...

இதயம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

வைசா

Sunday, January 14, 2007 10:22:00 AM  
Blogger அரை பிளேடு மொழிந்தது...

நல்ல விமர்சனம்.

-----------------

இந்த பொங்கல் தினத்தில்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்பன்.
அரைபிளேடு

Sunday, January 14, 2007 3:49:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு