ஒரு பாயோட பொங்கலை பாழாக்குன பகுத்தறிவு!

நம்ம நல்லடியார் பாய், "முஸ்லிம்களும் பொங்கலும்" அப்டின்னு எதிரொலிச்சு, அதுல, அவரோட பகுத்தறிவு(ஹிஹி அப்டின்னு அவ்ரே தானுங்க சொல்லியிருக்காரு :)) பார்வையில, பொங்கல் கொண்டாடறதே தப்புன்னு ஒரு மகா தீர்ப்பை வேற வாசிச்சிருக்காரு.

அதை பார்த்து பேஜாராகி, "நாட்டம, தீர்ப்ப மாத்து" ன்னு அங்கனயே ஒரு கொரலுடத்தான் பார்த்தேன். அது பெரிசாயிட்டதால, அதை இங்கனக்கி ஒரு பதிவா போட்டு, ஒரு பதிவு கயமைத்தனம். ஹிஹி..

நம்ம நல்லடியார் பாய்க்கு இருக்குற அவரோட பகுத்தறிவுல இப்டிக்கா அவருக்கு தெரியுதாமா.

//நடைமுறையில் பொங்கல் தினம் என்பது சூரிய வழிபாடு, பசு வழிபாடு என இந்து மதம் சார்ந்த தமிழர்கள் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. எனவே,பொங்கல் என்பது முஸ்லிம்களும் கொண்டாடும் பொதுவான திருநாள் அல்ல.//

ஏம் பாய், ஒருவேளை, நாளைக்கே, உலகத்துல உள்ள முஸ்லீம் எதுரிங்கோ, அதாவது இஸ்ரேலு மொதக்கா காஞ்சி மடங்க வரை உள்ள உங்களை 'மாறி பகுத்தறிவு சிங்கங்கள்' அப்டீன்னு வெச்சுக்கோங்களேன் -

அவிங்கலாம் ஒன்னு சேந்து, இஸ்லாத்துக்கு எதிரா சதி பண்ணி, இனி நாம -அதாவது முஸ்லீம் எதுரிங்கோ எல்லாரும், ரம்ஜான் நோம்பு, ஈத், பக்ரீத் மொதலான பண்டிகையை எல்லாம் வேற மாரிக்கா, பகுத்தறிவ ஊஸ் பண்ணீ, அதாவது, சூரியன், சந்திரன், பசு காளை, பன்னி, புள்ளையாரு, ராமரு, அவரோட அணில் கொரங்கு, ம்... புத்தரு, பெரிய ஏசு, அப்புறமா கைப்புள்ள ஏசுன்னு, அவங்கங்க மத வழியில வழிபட்டு கொண்டாடுவோம்னு முடிவுபண்ணி, அப்டியே ஆரம்பிச்சுட்டாங்கன்னா, உங்க நெல என்னாகும் பாய்?

அட ஒங்க நெலையை உடுங்க பாய். அது உங்க கவலை, உங்க பங்காளிக கவலை.

எங்கவலை எல்லாம் என்னப்பத்தி தான் பாய். அதை கீழ எயுதுறேன்.

1. ஒன்னுமொன்னா என்னோட பயகுற பாய்மாருங்கல்லாம், அவங்களோட பண்டிகையை கொண்டாடுறதை வுட்டுட்டா, வருஷத்தில ரெண்டு நாள் ஓசில கெடைக்கிற நல்ல பிரியாணிக்கு ஆப்புதானா? :(

2. பாய்மார் வீட்டுலேருந்து வர்ற 'குர்பானி' கறிய, மண்டபத்துல வெச்சு நாங்களே சமைச்சு(?), கொள்ளிடம் சாராயம் உதவியோட தின்னு, ஒரு ரெண்டு நாளு மட்டையாகி மோட்சமடையறது எல்லாம் அப்புறம் பழங்கதைதானா? :(

3. அப்புறம், வருஷத்துல ஒரு நாள், ஒரு தொப்பிய ஒன்னயும் போட்டுவுட்டு, கோப்பையில கஞ்சி கொடுப்பாங்களே, அதெலாம் உட்றுவாங்களா?

4. அட உள்ளதெல்லாம் பத்தாதுன்னு, உங்க பகுத்தறிவை (சிரிக்காம படிங்க மக்க்கா) 'எதிரிங்க என்னடா எனக்கு வெக்கிறது ஆப்பு? நானே எனக்கு வெச்சுக்கிட்டேன் போடா' ன்னு கொள்கை சிங்கம் வைகோ ரேஞ்சுக்கு சொல்லிக்கிறீங்க, //ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம்//

ஏம் பாய் இதெல்லாம் தேவையா? ஒங்களுக்கே ஓவரா தெரியலியா?

உட்டா, "பாப்பனெல்லாம் கறி துன்றான். அத்தொட்டு இனிமேக்கா முஸ்லீம் எல்லாம் சைவமா மாறி, அக்ரஹாரத்துல குடி இருக்கனும்னு' கூட சொல்வீங்க போல!

நல்லடியார் பாய், நீங்க தமிழனா? இல்லை அரபிக்கு பொறந்தவரா? எப்படியோ ஒங்க பகுத்தறிவை வெச்சு என்னவோ சொல்லிக்குங்க. எங்கியோ போய்க்குங்க, எதனா கொண்டாடுங்க, இல்ல கொண்டாடாமத்தான் உடுங்க.

பாய் வூட்டு பொங்கலை பத்தி எனக்கென்ன கவலை? :)

பிரியாணி மற்றும் மாட்டு கறிக்கு மட்டும் உங்க பகுத்தறிவுனால எந்த பாதிப்பும் வராம பாத்துக்குங்க பாய்.

இனிய 'தமிழர் திருநாளாம்' பொங்கல் வாழ்த்துக்கள் - தமிழராய் உணர்வோருக்கு மட்டும்!

போக்கிரி பொங்கல்- மலேசியாவில்!

Ilaya Thalabathay Vijay with Ashin in Pokkiry"அட, இந்த படத்துல அசின் இருக்காப்லயா?" என கேட்ட நண்பருடன் சேர்ந்து ஜொல்லியபடியே, கோலாலம்பூர் கொலோசியம் தியேட்டரின் உள்ளே நுழைந்தேன்!

வருங்கால 'டமிலக முதல்வர்கள்' என கன்பார்ம் செய்யப்பட்ட கோலிவுட் ஹீரோக்களின் பட விதியையும் மீறி, ஹீரோயின், (அட நம்ம அசின்தானுங்க) படம் முழுக்க வருகிறார். கூடவே நடிக்கவும் சில இடங்களில் வாய்ப்பு. அதுக்காக டைரக்டர் பிரபுதேவாவுக்கும், இளைய தளபதிக்கும் 'உங்கள்' சார்பா என் நன்றி. இது தான் படத்தோட முக்கிய +னு நான் நினைக்கின்றேன். (ஹிஹி..)

இன்னுமொரு ரவுடி Vs போலீஸ + முஸ்லீம் தேச துரோகி (விதிவிலக்கா இந்த படத்துல நேர்மையான போலீஸ் கமிஷனர் பாத்திரமும் ஒரு முஸ்லீம் - கலாம் எப்பெக்டா?) + அப்புறம் ஒரு அழகான அபலை பெண் என இப்போதைய ட்ரெண்டுக்கான படம். என்ன, இந்த படத்துல அபலை பெண்ணா, அநியாத்துக்கு அழகான நம்ம அசினை போட்டு எடுத்துருக்காங்க. அதுக்குன்னே மீண்டும் ஒரு முறை மேற்படி இரண்டு பேருக்கும் ஒரு நன்றி போட்டுக்கலாம்.(ஹிஹி)

இதுக்கு மேல படத்தை பத்தி சொல்லவோ, விமர்சனம் பன்னவோ எனக்கு சினிமா ஞானம் பத்தாதுன்றதால, விமர்சனமா இல்லாம, எனக்கு தோனுறத எழுதிருக்கேன். அதுனால, இதெல்லாம் ஒரு விமர்சனான்னு விமர்சிக்காம மேல படிங்க.

இரசிச்சது:

1. கவனிச்சதுல, மலேசிய தமிழர்களிடம் நல்ல ரசனை இருக்கிறது - அசின் வரும் காட்சிகளுக்கு அவர்கள் தரும் வரவேற்பே அதற்கு சாட்சி (ஹிஹி..)

2. விஜய்க்கு, ஆண்களைவிட பெண் இரசிகர்களே அதிகம். மிளகாய் விண்ணில் தெறிக்க Ashin learning to whistle from the tamil movie Pokkiry
காரமாய் விஜய் அறிமுகமாகும் காட்சியில், விசில் சத்ததை விட, வீலிடும் பெண்களின் குரலே அதிகம் கேட்கிறது. (பெண்கள்னா விசிலடிக்க மாட்டாங்களான்னு கேட்பவர்களுக்கு, விசிலடித்து ஆட்டோ கூப்பிடும் விஜயிடம், அசின் "எப்படி" என கேட்க, நாக்கை மடக்க சொல்லி, அசின் வாயில் தன் விரலை வைத்து விசிலடிக்க சொல்லி தரும் காட்சியே சாட்சி.)

3. சொன்னா நம்புங்க, விஜயைவிட அதிக வரவேற்பை பெற்றவர், இம்சை அரசன் வடிவேல் :)

4. எல்லாத்தையும் தூக்கி சாப்புடுறாரு, 'டேய் செல்லம்' பிரகாஷ்ராஜ்! ஹீரோ லெவலுக்கு கைதட்டல் வாங்குறாரு அறிமுக காட்சியிலேயே!

அது மட்டுமில்ல, பர்பாமென்சுலயும் பின்றாரு. அதுலயும், அவரை புடிச்சு உள்ள வெச்சு, "இவனுக்கு சாப்பாடு பிரியாணி, சிக்கன், மட்டன், என்ன வேணும்னாலும வாங்கி் கொடுங்க. தூங்க மட்டும் விடாதிங்க. தூங்கினான்னா உடனே அடிங்க" ன்னு கமிஷனர் நெப்போலியன் சொல்லிவிட்டு போக, பிரகாஷ்ராஜ் தூங்குவாரான்னு குண்டாந்தடியுடன் போலீஸ் அவரை சுத்தி நிக்க, தூங்கிவிடாமல் (அடி விழாமல்) இருக்க பிரகாஷ் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் தியேட்டரை குழுக்கி எடுக்கிறது.

விஜய்கிட்ட செமயா வாங்கி, இரத்தம் வழிய வழிய தள்ளாடியபடியே, பிரகாஷ் ராஜ் "டேடேடேய் செல்லம்" எனும் காட்சி - அதெல்லாம் பார்த்து ரசிக்கனும்ங்க!

6. அப்புறம், நாசர் தனக்கு கெடச்ச சின்ன ரோலை வழக்கம் போல நல்லா செஞ்சிருக்கார்.

7. பீடா + அசின் மேல ஜொள்ளூ வடிய வரும் அந்த 'காவாளி' போலீஸ் இன்ஸ்பெகடர். (யாருனு தெரியலே)

8. பாடல்களில், சாதி கொடுமை குறித்த சாடல் - ஒத்தை வரியாகவேனும் - மற்றும் பெண்கள் / குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராய் - உற்று கவனிககாவிட்டால் தவறவிடப்படும் அளவிலேனும் - ஒரு தமிழ் ஹீரோ பேசுவது. [பெண்களுக்கெதிரான வன்முறையை ஹீரோயிசமாக காட்டிய சூப்பர் ஹீரொக்கள் நிரைந்த தமிழ் திரை உலகில் இது சிறு புரட்சித்தான்]

9. 'வசந்த முல்லை போல வந்து அசைந்து ஆடும் வென்புறாவே' ரீமிக்ஸ் பாடல் + காட்சியாக்கிய விதம்.

எரிச்சலாகியது:

-1. வில்ல்ன் கூட்டத்தில வரும் 'கவர்ச்சி' பெண். என்னவோ(?) பண்ணபோராருன்னு பில்டப்பு கொடுத்து கடைசிவரை ஒன்னும் பண்ணாமலே செத்துபோரார். (ஆமா, அவரு யாருங்க?)

-2. துப்பாக்கி, தோட்டா, இரத்தம்னு பிரேம் / பிரேம் எக்கச்சக்க வன்முறை.

-3. வில்லனை தாவுத இப்ராகிம் க்ளோன் ஆக்கி வரும் 19991வது தேசபக்தி படம். :)

-4. பிரண்ட்ஸ் கூட்டனி இல்லாத விஜய் படமே வராதா?

-5. வில்லன் ஆட்கள் 20 பேரா போனாக்கூட, முதல்ல ஒருத்தர் மட்டும் போய் ஹீரோகிட்ட அடி வாங்கி விழும் வரை மற்றவர் காத்திருந்த் போய் தனி தனியா அடி வாங்கும் 'ஒழுங்கு முறை' இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம்மவர்களால் இரசிக்கப்படும்?

--6ஹீரோயின் உடை - அசின் காஸ்ட்யூம் படு திராபை. 'மாம்பழமாம் மாம்பழம்' பாடலில் வருவம் இரண்டு உடை தவிர வேறு காட்சிகளில் அம்மனியின் உடைகள் எதுவும் சிலாகிக்கும் படியாய் - அசினின் இயல்பான அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இல்லை. :(

ஆக மொத்தத்துல, பெரிசா சிலாகிக்க முடியலேனாலும் கூட, சிரித்து இரசிக்க முடிஞ்சது.

நேரமும் வாய்ப்பும் கெடைச்சால் நீங்களும் போய் படத்தை (முக்கியமா அசினை) பார்த்துட்டு நாலு வரி பதிவாக போடுங்களேன்.

அப்புறம் முக்கியமா - எல்லோருக்கும் எல்லா நலமும் கிட்டிட, தமிழர் திருநாளாம் 'பொங்கல்' வாழ்த்துக்கள்.