கழுகுகளை விரட்ட வரும் 'பெரியார்': கருணாநிதி

பெரியாரின் நினைவுச் சின்னங்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வட்டமிடும் கழுகுகளை விரட்டியடிக்கும் அளவுக்கு பெரியார் படம் வெற்றி மாலை சூட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஞானராஜசேகரன் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள பெரியார் படத்தின் ஆடியோ சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட்டார். அதை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நான் அரங்கத்தின் உள்ளே வந்தபோது என்னை அறியாமல், எனது கால்கள் தள்ளாடின. ஆங்கிலத்தில் டென்ஷன் என்பார்களே, அந்த டென்ஷன் என்னைக் கவ்விக் கொண்டது.

டென்ஷனுக்குக் காரணம் பெரியார் என்ற அந்தப் பெயர்தான். தம்பி சத்யராஜ் பெரியார் தோற்றத்தோடு காணப்பட்ட காட்சியைப் பார்த்தபோது மெய் சிலிர்த்தது. நான் என்னையே இழந்தேன்.

இது சத்யராஜ் செய்த தவம், வைரமுத்து செய்த தவம் என்று தம்பி வைரமுத்துவிடம் சொன்னேன்.

பெரியாருடைய படத்தை நாம் தயாரித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அவருடைய நினைவுச் சின்னங்களை அழித்து விட வேண்டும், ஒழித்த விட வேண்டும் என்று சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்குக் காரணம், வட்டமிடுவது எது என்று உங்களுக்குத் தெரியும். நானே எழுதியிருக்கிறேன் வட்டமிடும் கழுகு என்று.

அந்தக் கழுககுளை விரட்டியடிக்கிற அளவுக்கு இந்தப் பெரியார் படம் வெற்றி மாலை சூடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வெற்றி மாலை சூட வேண்டும்.

தந்தை பெரியார் சினிமாவை அறவே வெறுப்பவர் அல்ல. சூரியாகாந்தி படத்தின் 100வது நாள் விழாவில் கூட அவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் தலைமை வகித்து உரையாற்றி இருக்கிறார். அந்த உரையில் உள்ளபடி தொடர்ந்து படங்கள் வந்திருக்குமானால், வருமேயானால் அந்தப் படங்களை யாரும் வெறுக்க மாட்டார்கள்.

என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக
ஒன்றேனும் தமிழர் நடையுடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை.

வடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு
மாத் தமிழனில் நடுவினிலே தெலுங்கு கீர்த்தனங்கள்
வட மொழியில் ஸ்லோகங்கள்
ஆங்கிலப் பிரசங்கம் வாய்க்குவரா இந்துஸ்தான் ஆபாச நடனம்
அடையும் இவை அனைத்தையும் கழித்துப் பார்க்குங்கால்

அத்திம்பேர், அம்மாமி எனுத் தமிழ்தாம் மீதம்! என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியது போல்தான் படங்கள் இருந்தன. அதனால்தான் தந்தை பெரியார் திரைப்படங்களை வெறுத்து ஒதுக்கினார்.

பெரியார் அவர்கள் எனக்கு, ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு ஆசானாக இருந்தார். நாம் அவரை இன்றைக்கு இழந்திருக்கிறோம் என்றால், நாங்கள் இரண்டு பேரும் இன்றைக்கு இருக்கிறோம். நாங்கள் இருப்பது, என்னைப் பொருத்தவரையில், அவரைப் பொறுத்தவரையில், இரண்டு பேரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம், பெரியாருடைய புகழைப் பரப்பத்தான் இயற்கை எங்கள் இருவரையும் விட்டு வைத்திருக்கிறது என்ற அந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இங்கே பெரியார் ஆட்சி நடக்கிறது என்று குறிப்பிட்டார்கள். பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இணைந்து நடத்துகின்ற ஆட்சியை நிச்சயமாக நான் நடத்துவேன். அதற்கு நீங்கள் (கி.வீரமணி) 'கீ' யாக இருங்கள். ஏனெனில் நீங்கள்தான் கீ. வீரமணி ஆயிற்றே என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், பெரியார் வேடத்தில் நடிக்க சிவாஜி கணேசன் ஆசைப்பட்டார். ஆனால் அது அவருக்கு வாய்க்கவில்லை. அது சத்யராஜுக்குக் கிடைத்துள்ளது. எவ்வளவு பெரிய பெருமை!

அற்புதமான இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்தப் படத்திற்காக சத்யராஜ் பட்ட பாடெல்லாம் தகும். ஆனால் இதன் மூலம் வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. பெரியார் கருத்துக்களைச் சொல்லும்போது நஷ்டம்தான் ஏற்படும்.

நான் கி.வீரமணியை 4 .றை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு சந்திக்க முடியவில்லை. அதற்கு நான் செய்யும் தொழில் ஒரு காரணம். அவருக்கே முட்டைகளை வீசுகிறார்கள் என்றால், நமக்கு என்ன வீசுவார்கல் என எண்ணிப் பார்த்தேன். அடிக்கடி சந்திக்க முடியவில்லை.

நான் பெரியார் தொண்டராக மாற வழி விட்ட எனது குடும்பத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் எனக்கு கேரளாவில் சிறந்த பகுத்தறிவாளருக்கான விருது கொடுத்தார்கள். நடிப்பின் மூலம் எனக்குக் கிடைத்த பாராட்டு, பட்டங்களை விட இந்த விருதை நான் பெரிதாக கருதுகிறேன்.

எனக்கு தமிழ் வாத்தியார் முதல்வர் கருணாநிதிதான். ஆத்திகம் பேசுபவர்கள் வசதியானவர்கள் என்பது போலவும், நாத்திகம் பேசுகிறவர்கள் நாசமாகப் போனவர்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. எனக்குத் தெரிந்து நாத்திகம் பேசுகிறவர்கள் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள் என்றார் கமல்.

நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, கி.வீரமணி, நடிகை குஷ்பு, ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் உள்ளிட்டோரும் பேசினர். கமல்ஹாசன், சத்யராஜ், குஷ்பு ஆகியோர் கருப்பு உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நன்றி: தகவலும் படங்களும் Thats Tamil

14மறுமொழிகள்:

Blogger மாசிலா மொழிந்தது...

காலத்தை வென்றவர் கலைஞர். அனைத்து பெருமக்களுக்கும் நன்றி. தந்தை பெரியாரின் புகழ், அவரது கொள்கை பாரதத்தையே மாற்றப்போகிறது. கமலுக்கு ஒரு சிறப்பு நன்றி. பதிவை பகிர்நதமைக்கு நன்றி.
தந்தை பெரியார் புகழ் ஓங்குக!
அன்புடன் மாசிலா!

Sunday, December 24, 2006 4:36:00 PM  
Blogger Muralimanohar(#02717864569534015186) மொழிந்தது...

பெரியாரின் நினைவுச் சின்னங்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வட்டமிடும் கழுகுகளை விரட்டியடிக்கும் அளவுக்கு பெரியார் படம் வெற்றி மாலை சூட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."
"வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்குக் காரணம், வட்டமிடுவது எது என்று உங்களுக்குத் தெரியும்".

கருணாநிதி சரியாக யோசிச்சுதான் இதைச் சொன்னாரான்னு தெரியல்லியே?

வட்டமிடுவது எது என்பது ஒரு பக்கம். ஆனால் எதை வட்டமிடும்? பிணங்களைத்தானே?

முரளி மனோஹர்

Sunday, December 24, 2006 5:04:00 PM  
Blogger Thamizhan மொழிந்தது...

மிகப்பெரிய அதிபுத்திசாலி முரளிமனோகரர் போன்றோருக்குப் பதிலளிப்பது நேரத்தை வீணாக்குவது.இருந்தாலும் நமது மக்கட்குத் தெரியவேண்டுமல்லவா?
கழுகுகள் வட்டமிடுவது நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்பதையே அறியாதக் கோழிக்குஞ்சுகளை.
அவர் சொன்னது பிணந்திண்ணிக்கழுகுுகளையல்ல.பிணத்திலிருந்தும் பணம் பறிப்பவர்கள் அதுவும் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்கட்கு நேரே அனுப்புகிறேன் என்று ஏமாற்றி இழிச்சவாய்க் கோழிக்குஞ்சுகளிடம் பசுமாட்டிலிருந்து,பால் நெய்,அரிசி,பருப்பு,பணம் வாங்கி ஏமாற்றும் சவுண்டிக் கழுகுகளிடமிருந்து.என்ன புரிகிறதா?

Sunday, December 24, 2006 7:57:00 PM  
Blogger bala மொழிந்தது...

//தம்பி சத்யராஜ் பெரியார் தோற்றத்தோடு காணப்பட்ட காட்சியைப் பார்த்தபோது மெய் சிலிர்த்தது. நான் என்னையே இழந்தேன்//

வணக்கத்துடன் அய்யா,

சத்யராஜை தமிழர் மாமா கோலத்தில் கண்டு பரவசப்பட்ட சமத்துவ மாமா, குஷ்புவை தமிழர் மாமி கோலத்தில் கண்டு பரவசப்படாதது ஒருவகையில் ஆணாதிக்க போக்கு தான். இதை வன்மையாக கண்டிக்கவேண்டும்.

பாலா

Sunday, December 24, 2006 8:35:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

மாசிலா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

===================================

முரளி மனோஹர்,
வருகைக்கு நன்றி. உங்களுக்கான பதில் கீழே தமிழன் பின்னூட்டை பார்க்கவும்.

===================================

தமிழன்,
வருகைக்கும் பதிலளித்தமைக்கும் நன்றி.

===================================

பாலா,
வருகைக்கு நன்றி.
மாமா - மாமி என இனும் அக்ரஹாரம் தாண்டாத உங்கள் பார்வைக்காக பரிதாபப்படுகிறேன்.

'மாமி' களை கண்ட மாத்திரம் பரவசப்பட அவர் என்ன இருள்நீக்கி சுப்புணியா இல்லை அவரோட சிஷ்யகேடியா?

Monday, December 25, 2006 12:14:00 AM  
Anonymous பெரியவா மொழிந்தது...

முரளி மனோகர், பாலா, நன்னா கேட்டேள் போங்கோ..

இந்த சூத்ராள் அக்ஷில நம்வாளுக்கு என்னங்காணும் உரிமை குடுத்துருக்கா?

அந்த தாடிகாறா வந்து நம்மவா பொழப்புல எல்லாம் மண்ண வாரிப் போட்டு போயிட்டா; இவாள்ளாம் அதுக்கு எப்படி சந்தோஷப் படறா பாரும்.

ஏதோ உம்ம மாதிரி நாலஞ்சு பேரு இன்னிக்கு இந்த எழவெடுத்த இண்டர்நெட்டுல கூட நம்மவாளுக்கு ஆதரவா எழுதிண்டிருக்கேள். இவாளுக்கு அது கூட பொறுக்க முடியல்லியே..

நான் கேட்கறேன்.. சினிமா படம் எடுக்கற அளவுக்கு அந்த தாடிக்காரா அப்படி என்ன செஞ்சுட்டா பெருசா? இன்னிக்கு அக்ஷி சூத்ரா கைலன்னா போயிட்டு? அவா தானே அதுக்கு காரணம்..


By the way.. நீங்க வடகலையா தென்கலையா?

இவன்,
பெரியவா

Monday, December 25, 2006 12:42:00 AM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"பெரியாரின் நினைவுச் சின்னங்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வட்டமிடும் கழுகுகளை..."

நினைவுச் சின்னங்களை அழிக்கணும்னா அதுங்களைதான் வட்டமிடும் கழுகுகள். இதில் கோழிக்குஞ்சுகள் எங்கேருந்து வந்தன?

அப்புறம் சம்பந்தமில்லாமெ வேறு எழுதறீங்க. "பிணத்திலிருந்தும் பணம் பறிப்பவர்கள் அதுவும் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்கட்கு நேரே அனுப்புகிறேன் என்று ஏமாற்றி இழிச்சவாய்க் கோழிக்குஞ்சுகளிடம் பசுமாட்டிலிருந்து,பால் நெய்,அரிசி,பருப்பு,பணம் வாங்கி ஏமாற்றும் சவுண்டிக் கழுகுகளிடமிருந்து."
சரி இருக்கட்டும், நீ ஏம்பா அவங்களை கூப்புடறே? 50 வருஷமாச் சொல்லியும் பப்பு ஒண்ணும் வேகல்லியா?

ஒரிசாலே தலித்துகள் கோயில் கட்டினாங்களாம். அதிலேயும் பாப்பானைத்தானே பூசை செய்ய கூப்பிட்டிருக்காங்க?

நான் மறுபடியும் சொல்லறேன். கழுகுங்க சுத்துதுன்னா, அது பெரியார் சிலைங்களைத்தான், ஏன்னாக்க அவை பிணங்கள்.

முரளி மனோஹர்

Monday, December 25, 2006 1:00:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

வேறொரு பதிவரின் பெயரில் வந்த பின்னூட்டம், பெயர் நீக்கப்பட்டுள்ளது.
=================================
"பெரியாரின் நினைவுச் சின்னங்களை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வட்டமிடும் கழுகுகளை..."

நினைவுச் சின்னங்களை அழிக்கணும்னா அதுங்களைதான் வட்டமிடும் கழுகுகள். இதில் கோழிக்குஞ்சுகள் எங்கேருந்து வந்தன?

அப்புறம் சம்பந்தமில்லாமெ வேறு எழுதறீங்க. "பிணத்திலிருந்தும் பணம் பறிப்பவர்கள் அதுவும் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்கட்கு நேரே அனுப்புகிறேன் என்று ஏமாற்றி இழிச்சவாய்க் கோழிக்குஞ்சுகளிடம் பசுமாட்டிலிருந்து,பால் நெய்,அரிசி,பருப்பு,பணம் வாங்கி ஏமாற்றும் சவுண்டிக் கழுகுகளிடமிருந்து."
சரி இருக்கட்டும், நீ ஏம்பா அவங்களை கூப்புடறே? 50 வருஷமாச் சொல்லியும் பப்பு ஒண்ணும் வேகல்லியா?

ஒரிசாலே தலித்துகள் கோயில் கட்டினாங்களாம். அதிலேயும் பாப்பானைத்தானே பூசை செய்ய கூப்பிட்டிருக்காங்க?

நான் மறுபடியும் சொல்லறேன். கழுகுங்க சுத்துதுன்னா, அது பெரியார் சிலைங்களைத்தான், ஏன்னாக்க அவை பிணங்கள்.

முரளி மனோஹர்

Monday, December 25, 2006 1:26:00 AM  
Blogger bala மொழிந்தது...

//பரவசப்பட அவர் என்ன இருள்நீக்கி சுப்புணியா இல்லை அவரோட சிஷ்யகேடியா//

வணக்கத்துடன் அய்யா,

என்ன உங்க தலைவரை இப்படி கேவலமா பேசிட்டீங்க?
சமத்து(வ) மாமா பெரியாரையும்,காஞ்சிபுரத்தாரையும் ஒரே லெவெலில் வச்சிட்டீங்க.

ரெண்டு பொண்டாட்டி,ஊருக்கு ஒரு வைப்பாட்டின்னு இருக்கிற சமத்துவ மாமா ரேஞ்சு என்ன? காஞ்சிபுரம் ரேஞ்சு என்ன?

sense of proportion இல்லையே..
தலைவர் கோவிச்சுக்க போறாரு.

Monday, December 25, 2006 4:17:00 AM  
Anonymous jaallyjumper.blogspot.com மொழிந்தது...

அருமையான பதிவுக்கு நன்றி.
பதிவுக்கு சுவை சேர்க்கும் பாலா,முரளி ஆகியோருக்கும் நன்றி.

Monday, December 25, 2006 5:11:00 AM  
Blogger vigneshwaran shanmugam மொழிந்தது...

//ஆனால் இதன் மூலம் வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. பெரியார் கருத்துக்களைச் சொல்லும்போது நஷ்டம்தான் ஏற்படும்.//

பல நாட்களாக பெரியார் கொள்கைளை கூறி வருபவரான முதல்வர் எந்த நஷ்டத்தை சந்திதார்.


டோடல் கன்பீஷ்

Saturday, January 13, 2007 10:47:00 PM  
Blogger சீனு மொழிந்தது...

//இந்தப் பெரியார் படம் வெற்றி மாலை சூடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வெற்றி மாலை சூட வேண்டும்.//

வெற்றி தோல்வி நல்ல திரைக்கதையில் இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஸ்டார் வேல்யூ இருப்பதால், ஓபனிங் ஒன்றும் பிரச்சினை இல்லை. 'பாரதி' கொடுத்த ஞானராஜசேகரனை நம்பலாம். எனக்கும் ஹிட் ஆகும்கிற நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

//நாம் அவரை இன்றைக்கு இழந்திருக்கிறோம் என்றால், நாங்கள் இரண்டு பேரும் இன்றைக்கு இருக்கிறோம்.//

ஆமாம். இழந்திருப்பது பெரியாரை மட்டும் அல்ல. அவர் கொள்கைகளையும் தான்.

Sunday, February 04, 2007 6:27:00 AM  
Blogger கொசுபுடுங்கி மொழிந்தது...

முரளி மனோஹர் யார் என்று தெரிகிறதா இப்போது?

என் பதிவையும் படித்துப் பாருங்கள்.

Sunday, February 04, 2007 5:39:00 PM  
Anonymous bala மொழிந்தது...

வணக்கத்துடன் அய்யா!

எங்கள் டோண்டு மாமா முரளிமனோகர் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டு தனக்கு தானே சூனியம் வைத்து விட்டார் இந்த பதிவில்.

டோண்டு மாமா எங்கள் பாப்பார ஜாதியை வளர்ப்பதில் வல்லவர். அவர் பெயர் கெட்டு விட கூடாது.

அந்த சூனியத்தை நீக்கி எங்க மாமாவை காப்பாற்றும்படி கேட்டு கொள்கிறேன்.

பாலா

Sunday, February 04, 2007 8:36:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு