தஸ்லீமா இந்தியாவில் குடியிருக்க அரசு தடை.

தஸ்லிமா நஸ்ரின், வங்கதேச பெண் எழுத்தாளர். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராய் குரலெழுப்ப்பியதால், வங்கதேச மத அடிப்படைவாதிகளால் எதிர்கப்பட்டார். எதிர்ப்பு, கொலை மிரட்டல் பட்வா வர, அங்கு வாழ இயலாத சூழலில், அவரை வரவேற்ற ஐரோப்பிய யூனியன், அவருக்கு குடியுரிமையும் வழங்கியது.

ஆனால், அதை மறுத்த வங்காளியான தஸ்லிமா தேர்தெடுத்தது, அவர் இன மக்கள் வசிக்கும் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா. "எனது வேரை இங்கு உணர்கிறேன்," என்று அதற்கு காரணமும் கூறியிருந்தார்.

சென்ற ஆண்டு, மத்திய அரசு தஸ்லிமா இந்தியாவில் குடியிருக்க ஓராண்டு அனுமதி அளித்திருந்தது. இப்போது அது முடிவுறும் வேலையில், அதை நீட்டிக்க கோரிய அவரின் வேண்டுகோள், மேற்கு வங்க அரசினால், மத்திய அரசுக்கு அனுப்பட்டிருக்கிறது. குடியிருப்பு உரிமையை நீட்டிப்பதற்கு மாறாய், குடியேற்ற உரிமையை நீக்கி, 6 மாத கால சுற்றுலா விசா மட்டும் வழங்கி வங்கதேச 'பச்சை' படைகளுக்கு பால் வார்த்திருக்கிறது, மத சார்பற்ற இந்திய அரசு.

தான் மீண்டுமொருமுறை வேருடன் பிடுங்கப்பட்டதாக தெரிவிக்கிறார், தஸ்லிமா நஸ்ரின்.

இந்திய சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்க வேன்டியதற்கு உள்ள அனைத்து நியாயங்களும், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் அல்லது உலகின் பிற எந்த நாட்டிலும் வாழும் சிறுபான்மையினருக்கும் - அவர்கள் மதம் எதுவாக இருந்தாலும் - பொருந்தும் தானே?

இங்கே மதச்சார்பின்மை 'பேசு'பவர்கள் மற்ற நாடுகள் என்றால் மவுனிப்பதும், பாகிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆதரவு குரல் கொடுப்பவர்களே இங்குள்ள சிறுபான்மையினருக்கெதிரான கொடுமையை நிகழ்த்துவர்களாயிருப்பதும்....

'மதம் மனிதத்துக்கு எதிரானது' என்பதை நிரூபிக்க, மனிதத்தை கொல்லும் மனிதர்கள்(?).

10மறுமொழிகள்:

Blogger விடாதுகருப்பு மொழிந்தது...

நல்ல பதிவு நண்பரே.

Wednesday, August 16, 2006 7:49:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

விடாதுகருப்பு,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Wednesday, August 16, 2006 8:04:00 PM  
Blogger கல்வெட்டு (எ) பலூன் மாமா மொழிந்தது...

//'மதம் மனிதத்துக்கு எதிரானது' என்பதை நிரூபிக்க, மனிதத்தை கொல்லும் மனிதர்கள்(?).//

நல்ல பதிவு.

யார் என்ன சொன்னலும் மதயானை மனிதத்தை காயப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.

Wednesday, August 16, 2006 9:27:00 PM  
Blogger Sivabalan மொழிந்தது...

நல்ல பதிவு.

Thursday, August 17, 2006 7:55:00 AM  
Blogger Vajra மொழிந்தது...

..
இங்கே மதச்சார்பின்மை 'பேசு'பவர்கள் மற்ற நாடுகள் என்றால் மவுனிப்பதும்,
..

மற்ற நாடுகள் அல்ல. இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிவிடுங்கள்..அது தான் சரி. அதற்காகத்தான் அதைப் போலி மதச்சார்பின்மை என்கின்றனர்.

Sunday, August 27, 2006 12:46:00 PM  
Blogger Dharumi மொழிந்தது...

more loyal than the king - என்று சொல்வார்களே, நமது ஆட்சியாளர்களுக்குத்தான் அது மிகவும் பொருந்தும்.

Friday, September 01, 2006 10:26:00 AM  
Blogger koothaadi மொழிந்தது...

தஸ்லீமா வுக்கு அடைக்கலம் கொடுக்காதது அரசியல் மட்டுமே ..நம் அரசாங்கம் மதம் சம்பந்தப் பட்ட எல்லா விசயங்களிலும் முதுகெலும்ப்பு இல்லாமல் தான் செயல் பட்டுள்ளது..அதற்கு இன்னுமோர் உதாரணம்

Friday, September 01, 2006 11:03:00 AM  
Blogger arunagiri மொழிந்தது...

"மதம் சம்பத்தப்பட்ட எல்லா விஷயங்களிலும்..." என பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் சம்பத்தப்பட்ட விஷயங்களில் என எழுதுவதே சரி. ஓட்டுப்பொறுக்கி "சிக்"யூலரிஸம்தான் நம் நாட்டைப் பீடித்திருக்கும் ஆகப்பெரும் அழிவு நோய். தனிமைப்படுத்தப்படும் பெரும்பான்மை இந்துக்கள் மத அடிப்படையில் ஒன்றுதிரளாமல் தமக்கு சம நீதி கிடைக்காது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்நிலைக்கு கிறித்துவர்களோ, முஸ்லீம்களோ அல்ல, மைனாரிட்டி கால்நக்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்தான் முழுமுதற் காரணம்.

"நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகளே முடிவு செய்கிறார்கள்"- மாவோ (what an irony)

Saturday, September 02, 2006 11:15:00 AM  
Blogger bala மொழிந்தது...

//ஏனுங்க, பதிவே கயமை - அப்புறம் பின்னூட்ட கயமை இல்லேன்ன எப்படி? :)//


என்னைக் கேட்டா, ரம்ஜான் தான் தமிழர் திருநாள்னு அதிகாரபூர்வமா அறிவிச்சுட்டா மத நல்லிணக்கத்துக்கு வழி கோலும்னு நினைக்கிறேன்.நிறைய தமிழர்கள் ரம்ஜான் கஞ்சி குடிக்கலையே என்ற பெரியார் நெஞ்சில் தைத்த இன்னுமொரு முள்ளையும் எடுத்த பெருமை மஞ்ச துண்டுக்காரருக்கு வந்து சேரும்.செய்வாரா?

பாலா

Sunday, January 14, 2007 7:08:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

யோவ் பாலா,
நல்ல குசும்புதான். ஆனா குருட்டு பூனை விட்டத்தில பாஞ்ச கதையா என்ன எங்கேன்னு தெரியாம இந்த பதிவுல வந்து பினூட்டுகின்றீர்.

பதில் எதிர்பார்த்து பின்னூட்டமிட்டிருந்தால்
சரியான பதிவில் மீண்டும் பின்னூட்டமிடவும் - பதில் எழுதுகிறேன்.

Sunday, January 14, 2007 7:39:00 AM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு