அசைவ இந்தியாவில் பட்டினி இன்னும் போகலே!

இந்தியாவில் 35% பேர் கடந்த ஆண்டில் ஒரு முறையாவது, அவர்களோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினரோ, சாப்பாட்டு கிடைக்காமல் இருந்துள்ளனர்.

இதில் 7% பேருக்கு பட்டினி கிடக்க அடிக்கடி நேருகிறது.

தாழ்த்தப்பட்ட, பழ்ங்குடியின மக்களுடன், கிராம நகர வேறுபாடின்றி ஏழைமக்களிடமே பட்டினி பரவலாக உள்ளது.

சரி சாப்பிடுர மக்கள் எப்படியான சாப்பாட்டை சாப்பிடுறாங்க?

அசைவமுண்டு, சைவமும் உண்டு

இந்தியாவில், 60% பேர் மாமிச பட்சினிகள் என்பது ஒரு சுவாரசியமான தகவல். 31% சைவமும், 9% பேர் முட்டை அடிக்கும் சைவர்களாம்.

பிராமணர்களில் 55% மட்டுமே சைவம். (அப்ப மீதி?) கிறித்துவர்களில் 8% மும், முஸ்லீமகள் 3% மும் சைவர்கள்.


13% பேர் குவாட்டர் கோவிந்துகளாம். குடி பழக்கம் 'மிக' அதிகரித்துள்ளதாக 40%மும், கொஞ்சூண்டு தான்னு 24%மும், கொறைஞ்சு போச்சுன்னு 13%மும் கூறுகிறார்கள். ஆனால் (மருத்துவர் தமிழ்குடிதாங்கி மகிழும்படி) 73% பேர் மதுவிலக்கு வேண்டும் என விரும்புகிறார்களாம்.

மேற்படி தகவல்கள் ஹிந்து, CNN-IBN எடுத்த சர்வேயில் வெளிவந்துள்ளன. மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு சுட்டி
நன்றி: The Hindu

3மறுமொழிகள்:

Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

ஜோசப் சார்,
முனியாண்டி விலாஸ் பிரியாணியோ, மெக்டொனல்ட்ஸ் பர்கரோ, ப்ராமணர்கள் வெளிப்படையாக சாப்பிடுவதாகவே தெரிகிறது. :)

Sunday, August 13, 2006 10:46:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

நைனா வணக்கம்,
மேலே உள்ள tbr.joseph இன் பின்னூட்டம் போலியுடையது.

Sunday, August 13, 2006 10:54:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

//நைனா வணக்கம்,
மேலே உள்ள tbr.joseph இன் பின்னூட்டம் போலியுடையது. //

தகவலுக்கு நன்றி நைனா,
போலியின் பின்னூட்டம் நீக்கப்பட்டது.

Sunday, August 13, 2006 11:32:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு