தடை சரியே - சோ விளக்கம்!

அகில உலக அரசியல் ஞானியும், 'தலை'சிறந்த பத்திரிக்கையாளரும், முன்னாள் கமெடி நடிகருமான சோ, 'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று கருணாநிதி அரசு கொண்டுவந்த அவசர சட்ட திருத்தத்திற்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருப்பது 'சரியே' என்பதை தனது வழமையான வாதங்களுடன் முன் வைத்தார்.

இன்று தனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்த சோ வை குறிப்பிட்ட 'சில' பத்திரிக்கை நிருபர்கள் மட்டும் சூழ்ந்து கொண்டு இடைக்கால தடை குறித்து கேட்டனர்.

"In fact, சுப்ரீம் கோர்ட் பிராமனரல்லாத பிற ஹிந்து இளைஞர்களை காப்பாற்றவே இப்படியோர் இடைக்கால தடையை கொடுத்திருக்கிறதா நான் நினைக்கிறேன்" என்று கூறியதும் செய்தியாளர்கள் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் 'ஙே...' என 'முழித்தனர்'.

மேற்கொண்டு ஏதும் கேட்காமல் முழித்த நிருபர்களை, அதைவிட பயங்கரமாக முழித்தபடியே சோ கூறினார், "இப்போ, இடைக்கால தடை விதிக்காம, வழக்கு நடந்து, இந்த அவசர சட்ட திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது அப்டீன்னு இறுதி தீர்ப்பு வருதுன்னு வெச்சுக்குவோம், அதுக்குள்ள கருணாநிதி ரோட்டுல, (சற்றே நிறுத்தி) ஈரோட்டுல இல்ல (நிருபர்கள் 'கெக்கே பிக்கே' என சிரிக்கின்றனர்) போர வர்றவங்களை அரசியல் காரணத்துக்காக ஆசை காண்பிச்சு அர்ச்சகர் ஆக்கியிருந்தார்னா, அவங்களோட கதி?"

உணர்ச்சி வயப்பட்ட தினமலம் ரிப்போர்ட்டர் "பேஷ், பேஷ்," என்ற படி கை தட்டுகிறார். கூடத்திலிருக்கும் 'ஒருவர்' குணா கமல் மாதிரி கைகளை சோ இருக்கும் திசை நோக்கி நீட்டியபடி இடம் வலமாக ஆட ஆரம்பிக்கிறார்) கை தட்டலையும், குணா டான்ஸையும் உள்ளுக்குள் ரசித்தபடியேயும், வெளிக்கு அலட்சியம் செய்த படி தன் கருத்தை கூறுகிறார் அரசியல் மேதை 'சோ', "சுப்ரீம் கோர்ட், ஹரிஜன, மற்ற ஜாதி ஹிந்து இளைஞர்களை கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சியிலேந்து காப்பாத்திருக்குன்னு தான் நான் நினைக்கிறேன். அதுக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு மொத்த தமிழ் நாடும் நன்றி கடன் பட்டிருக்கு."

'கருணாநிதி, சூழ்ச்சி' இரண்டையும் ஒரே வாகியத்தில் கேட்டதால் சகஜ நிலைக்கு திரும்பிய தினமலம் நிருபர், "இந்த சட்ட திருத்தம் தேவையா? ஹிந்து அமைப்புகள் வேறு அனைவரும் அர்ச்சகர் ஆக ஆதரவு தெரிவிக்கின்றதே? இதனால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?" என எடுத்து கொடுக்கிறார்.

('தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?' என்பதை மிகுந்த கவலையுடனே கேட்கிறார் தினமலம் நிருபர். அதை உள்வாங்கியபடி -மேதையோன்னோ?) சோ சொல்கிறார், "கருணாநிதியும் ஒன்னை சொல்றார், அதை ஹிந்து இயக்கமும் ஆதரிக்குதுன்னா அதுலேந்து என்ன தெரியுது?" என கேட்டு நிறுத்தி முழு வீச்சில் முழித்தார் சோ. (கூட்டத்திலிருந்து 'ஒருவர்' "என்ன தீர்க்கமான பார்வை! பகவானே" என்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்)

பேச்சற்று இருந்த நிருபர்களிடம், "இந்த சட்டமே தமிழர்களுக்கு எதிரானதுன்றது புரியல்ல?" என்று கேட்ட சோ, இப்பொது நிருபர்கள் தன்னை விட பயங்கரமாக முழிப்பதை பார்த்து சுதாரித்து, உடனடியாக தொடர்ந்தார், "இப்போ தமிழ்நாட்டுல எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சுட்டு அமெரிக்கா, சிங்கப்பூர் (அவர் சொன்ன மற்ற ஊர்கள்லாம் தினமலம் வாசகர்களுக்கு - அதன் நிரூபர்/ஆசிரியருக்கும் கூடத்தான்- புரியாது) இல்லேன்னா டைடல் பார்க்குல வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்குறது கருணாநிதிக்கு புடிக்கல. அதான், சம்ஸ்கிருதம் படிச்சுட்டு (கருணாநிதி எப்போ சம்ஸ்காரம் பண்ண சொன்னார்? சாரி, சமஸ்கிருதம் படிக்க சொன்னார்னு யாரும் கேக்கல) கோவில்ல மணியாட்டி தட்டுல காசு விழுமான்னு பாத்துக்கிட்டு இருக்கட்டும்னு கெட்ட எண்ணத்துல இப்படியொரு சட்டம் கொண்டுவர பாக்குறார். "

மேர்கொண்டு ஏதும் கேள்வி கேட்கும் நிலையில் நிருபர்கள் இல்லையென்பதை உணர்ந்த சோ தொடர்கிறார், "கோவில்ல பூஜை பண்ணா என்ன கிடைக்கும்? அரை தேங்கா மூடியும், மீந்து போன அக்கார வடிசலும்தான். ('இதுக்கா இவ்ளே அடிச்சுக்கரா இவா' ந்னெல்லாம் யாரும் கேட்கல) பரம்பரையா பூஜை செய்கிறவங்களே அதை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகும்போது, மத்தவங்களை இதுல இழுத்துவிட கருணாநிதிக்கு என்னா காரணம்?" அங்கிருப்போர் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பது தெரிந்தே தொடர்கிறார் சோ.

"கருணாநிதியோட குடும்ப அரசியல் தான் எல்லாத்துக்கும் காரணம். அவரோட சேர்ந்த ராமதாஸ் கூட கருணாநிதியால தான் கெட்டார். ராஜாஜி (பெயர் கேட்டதுமே கூட்டத்திலிருந்து 'ஒருவர்', "சரணம், சரணம்") நெனைச்சிருந்தா அவர் மகன்களை பிரதமாரக்கியிருந்திருக்கலாம். ஆனால், (சோவின் குரலில் ஏமாற்றம் தெரிகிறது. கூட்டத்திலிருக்கும் 'ஒருவர்' கண்ணீர் வடிக்கிறார்) ராஜாஜி அதை செய்யல. ஏன்னா அவர்லாம் மகோன்னதமான தலைவர். (கூட்டத்திலிருக்கும் 'ஒருவர்' சாமியாடும் நிலைக்கு போய், அரசியல் மேதை 'மகான்' சோவின் பேட்டிக்கு இடையூராகுமே என்று தன்னை கட்டுப்படுத்திக்கொள்கிறார்) ராமதாஸும், கருணாநிதியும், மகனையும், பேரனையும் மத்திய மந்திரியாக்கி அழகு பாக்குறதுக்கு தமிழ் நாட்டோட நலனை பாழாக்குறாங்க. இந்தி படிக்காதேன்னு சொல்லி எல்லாரையும் கெடுத்துட்டு, பேரனை மட்டும் ஹிந்தி படிக்க வெச்சு மத்திய மந்திரியாக்கிட்டார். (பேரனுக்கு ஹிந்தி தெரியாதுன்னு கருணாநிதி சொல்லிட்டாரேன்னு எல்லாம் சொல்ல அங்கே யாரும் இல்ல) இவங்களோட சுய நலத்தை ஜனங்கள் புரிஞ்சுக்கனும்."

"கருணாநிதி பெரியாரையும் மதிக்கலேன்னு இதுலேருந்து தெரியுது. (நக்கலாக சிரித்தபடி) கடவுள் இல்லை, கோயிலுக்கு போகாதேன்னு சொன்ன பெரியாரோட சீடர் கோயில்ல அர்ச்சகரா யார் ஆகுரதுன்னு கவலை படலாமா?" (மீண்டும் கைதட்டல். 'ஒருவர்' விசிலடித்து நடனமாட ஆரம்பித்து, பின்னர் தன்னிலை மீண்டும் உணர்ந்தவராய் நிறுத்துகிறார்.)

பேச்சற்று இருந்த நிருபர்களிடம் மேற்கொண்டு பேசுகிறார் சோ, "அதனால தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் அரசியல் வாதிகளோட பேச்சை கேட்டு அர்ச்சகர் ஆகி எதிர்காலத்தை கெடுத்துக்காம, ஹிந்தி படிச்சு பீகார், உ.பி, உத்திராஞ்சல்ல இருக்கிற வேலை வாய்ப்புகளையும், கம்ப்யூட்டருக்குன்னே உருவான சம்ஸ்கிருதத்தை படிச்சு அமெரிக்காவிலயும் வெலை பார்க்கனும்னு தான் நான் விரும்பறேன். அப்படியே தான் சுப்ரீம் கோர்ட்டும் விரும்புதுன்னு இந்த தடை மூலமா நான் புரிஞ்சுக்கறேன். அதனால இளைஞர்களை கெடுக்கும் இந்த சட்டத்தை தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தரும் எதுக்கனும்".

நிருபர்கள், தங்கள் கொள்கையையொட்டிய ஒரு பேட்டி கிடைத்த திருப்தியிலும், சந்தியா வந்தனம் பண்ண நேரம் நெருங்கிவிட்டதே என்பதாஅலும், பேட்டியை முடித்து கிளம்ப ஆயத்தமானார்கள்.

அதே நேரம் சோவும், "திராவிட அரசியலின் இன்னொரு கோமாளித்தனம், சுப்ரீம் கோர்ட்டினால் மறுபடியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது." என்று பண்ச் கொடுத்து பேட்டியை முடித்த படி imported சொகுசு ஊர்தியில் ஏறி மறைந்தார்.

காரில் ஏறி போன பின்பும் கூட சோவின் தலைக்கு பின் இருந்த ஒளிவட்டம் அங்கேயே இப்போதும் இருப்பதை கண்ட கூட்டத்திலிருந்த 'ஒருவர்' (சோ பக்தர்), சாஸ்டாங்கமாக சோ நின்ற இடத்தில் விழுந்து நமஸ்கரித்தார். நமஸ்கரித்து எழுந்த பின்புதான் புரிந்தது அது ஒளி வட்டமல்ல, காலை முதல் மாலை வரை மட்டுமே எறியும் சென்னை மாநகராட்சி மின் விளக்கு ஏற்படுத்திய காட்சிப்பிழை எனபது. இருந்தாலும் அந்த விளக்கை அந்த நேரத்தில் சோவின் தலைக்கு பின்னால் வைத்து, அந்த தலையையும் மொட்டையாய் வைத்து, அந்த ஒளி அதில் பிரதிபலிக்க செய்து, தனக்கு சோவின் மேன்மையை விளக்கியது 'உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன்' தான் என தனக்கு தானே சொன்னபடி கிளம்பினார் - ஒரு பதிவு போட.

அது பற்றி பின்னர் பேசுவேன்!

9மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

LOL

Monday, August 14, 2006 12:48:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

அம்பி கலக்கறேள்! சொன்னா புரியுமோன்னா? ஆத்துல செத்த மாமிகள் இதப்பத்தி கதிகலங்கிபோனா... சோ மாமா நன்னா விளக்கிருக்கா

Monday, August 14, 2006 4:25:00 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"இருந்தாலும் அந்த விளக்கை அந்த நேரத்தில் சோவின் தலைக்கு பின்னால் வைத்து, அந்த தலையையும் மொட்டையாய் வைத்து, அந்த ஒளி அதில் பிரதிபலிக்க செய்து, தனக்கு சோவின் மேன்மையை விளக்கியது 'உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன்' தான் என தனக்கு தானே சொன்னபடி கிளம்பினார் - ஒரு பதிவு போட."
வாய்விட்டு சிரிக்க வைத்த கிண்டல். பலே.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவ்னே இட்டான் என்பதை உணர்த்த இதன் நகலை சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Monday, August 14, 2006 7:00:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

டோண்டு ராகவன்,
வருகைக்கும் கருத்துக்கும், மேலாக ரசித்தமைக்கும் நன்றி. :)

அனானிகளா,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அடுத்த முறை வரும்போது ஏதாவது ஒரு பேரோட வாங்களேன்.

Tuesday, August 15, 2006 5:33:00 AM  
Blogger enRenRum-anbudan.BALA மொழிந்தது...

வணக்கத்துடன்,
உங்கள் நகைச்சுவையுடன் கூடிய நடையை மிக மிக மிக ரசித்தேன் ! Fantastic ! தொடர்ந்து எழுதுங்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 15, 2006 5:35:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

பாலா,
தங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

Tuesday, August 15, 2006 7:19:00 AM  
Blogger Seemachu மொழிந்தது...

நல்லா எழுதியிருக்கீங்க..
அந்த பத்திரிகை பேரில் உள்ள வார்த்தை ஜாலம் மட்டும் இடிக்கிறது. படிக்கும் போது ஒரு அருவருப்பு தருகிறது. அது அந்தப் பத்திரிகை மேலான அருவருப்பு இல்லை. உங்கள் எழுத்தின் மீது தான் தெரிக்கிறது.
அந்த வார்த்தை பகடி தவிர்ப்பது நலம். உங்களுக்கு அதனால் ஆகப் போவது எதுவும் இருக்கிறார் போல் தெரியவில்லை.

ஆமாம், "என் பேரனுக்கு இந்தி தெரியாது ன்னு கருணாநிதி சொல்லிட்டா சரியாப் போச்சா?" மத்ததுக்கெல்லாம் மார்க் ஷீட் காட்டி நிரூபிக்கிறவர் இதுக்கு எப்படி நிரூபிச்சாரோ?

சீமாச்சு...

Tuesday, August 15, 2006 8:25:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

சீமாச்சு,
//நல்லா எழுதியிருக்கீங்க..//

மிக்க நன்றி..

//அந்த பத்திரிகை பேரில்//

நான் எந்த தனிப்பட்ட பத்திரிக்கையையும் குறிப்பிடவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். எனினும் அந்த வார்த்தை ஏதேனும் ஒரு பத்திரிக்கையை குறிப்பிடுவதாக உங்களுக்கு தோன்றினால், மன்னிக்கவும்.

//அந்த வார்த்தை பகடி தவிர்ப்பது நலம்.//

அறிவுறுத்தலுக்கு நன்றி. அருவருப்பு வராத அளவில் எழுத முயல்கிறேன்.

//ஆமாம், "என் பேரனுக்கு இந்தி தெரியாது ன்னு கருணாநிதி சொல்லிட்டா சரியாப் போச்சா?" மத்ததுக்கெல்லாம் மார்க் ஷீட் காட்டி நிரூபிக்கிறவர் இதுக்கு எப்படி நிரூபிச்சாரோ?//

அதை அவர் ஒரு பேட்டியில் சொன்னதை பார்த்திருக்கிறேன். மற்றபடி 'தெரியாது' என்பதை எப்படி நிரூபிக்க முடியும்னு எனக்கு தெரியல!

எப்படி நிரூபிக்க வேண்டும் (நானல்ல அவர்) என எதிர்பார்க்கின்றீர்கள் என கூற இயலுமா?

புதிதாக தமிழில் எழுத முயலும் என் பதிவுக்கு வந்து வாசித்து, அறிவுரை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.

Tuesday, August 15, 2006 8:57:00 AM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

"எப்படி நிரூபிக்க வேண்டும் (நானல்ல அவர்) என எதிர்பார்க்கின்றீர்கள் என கூற இயலுமா?"
முதலில் தன் பேரனுக்கு ஹிந்தி தெரியும், ஆகவே மத்திய மந்திரியானார் என்று தாத்தாவுக்கே உரிய பெருமையுடன் நிருபர்களிடம் கூறித் தொலைத்து விட்டார். இப்போது செய்வது டேமேஜ் லிமிட்டிங் செய்கை அவ்வளவே.

ப்ளஸ் டூ மார்க் ஷீட்டைக் காண்பித்தால் அதில் ஹிந்தியும் ஒரு சப்ஜக்டாக இருக்குமே. அதே கஷ்டம்தானே அன்புமணிக்கும் அவர் மகள்களுக்கும்? பின்னவர் செய்த டேமேஜ் லிமிட்டிங் எக்ஸர்சைஸ் அவர்களை தில்லியில் உள்ள தமிழ் பள்ளியில் பகுதி நேரம் தமிழ் கற்க அனுப்புவதாகக் கூறிக் கொண்டது.

அவ்வளவுதான் விஷயம்.

திராவிடப் பாரம்பரியக்காரர்களுக்கே அதுதான் பிரச்சினை. சுயமரியாதை தங்களுக்கு மட்டும் இருக்க வேண்டும், தன் தொண்டர்களுக்கு இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் தான் சில சந்தர்பங்களில் அவர்களை அவமானப்படுத்தும்போது கண்டிப்பாக இருக்கக் கூடாது, அவ்வளவுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Tuesday, August 15, 2006 7:17:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு