தஸ்லீமா இந்தியாவில் குடியிருக்க அரசு தடை.

தஸ்லிமா நஸ்ரின், வங்கதேச பெண் எழுத்தாளர். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராய் குரலெழுப்ப்பியதால், வங்கதேச மத அடிப்படைவாதிகளால் எதிர்கப்பட்டார். எதிர்ப்பு, கொலை மிரட்டல் பட்வா வர, அங்கு வாழ இயலாத சூழலில், அவரை வரவேற்ற ஐரோப்பிய யூனியன், அவருக்கு குடியுரிமையும் வழங்கியது.

ஆனால், அதை மறுத்த வங்காளியான தஸ்லிமா தேர்தெடுத்தது, அவர் இன மக்கள் வசிக்கும் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா. "எனது வேரை இங்கு உணர்கிறேன்," என்று அதற்கு காரணமும் கூறியிருந்தார்.

சென்ற ஆண்டு, மத்திய அரசு தஸ்லிமா இந்தியாவில் குடியிருக்க ஓராண்டு அனுமதி அளித்திருந்தது. இப்போது அது முடிவுறும் வேலையில், அதை நீட்டிக்க கோரிய அவரின் வேண்டுகோள், மேற்கு வங்க அரசினால், மத்திய அரசுக்கு அனுப்பட்டிருக்கிறது. குடியிருப்பு உரிமையை நீட்டிப்பதற்கு மாறாய், குடியேற்ற உரிமையை நீக்கி, 6 மாத கால சுற்றுலா விசா மட்டும் வழங்கி வங்கதேச 'பச்சை' படைகளுக்கு பால் வார்த்திருக்கிறது, மத சார்பற்ற இந்திய அரசு.

தான் மீண்டுமொருமுறை வேருடன் பிடுங்கப்பட்டதாக தெரிவிக்கிறார், தஸ்லிமா நஸ்ரின்.

இந்திய சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்க வேன்டியதற்கு உள்ள அனைத்து நியாயங்களும், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் அல்லது உலகின் பிற எந்த நாட்டிலும் வாழும் சிறுபான்மையினருக்கும் - அவர்கள் மதம் எதுவாக இருந்தாலும் - பொருந்தும் தானே?

இங்கே மதச்சார்பின்மை 'பேசு'பவர்கள் மற்ற நாடுகள் என்றால் மவுனிப்பதும், பாகிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு ஆதரவு குரல் கொடுப்பவர்களே இங்குள்ள சிறுபான்மையினருக்கெதிரான கொடுமையை நிகழ்த்துவர்களாயிருப்பதும்....

'மதம் மனிதத்துக்கு எதிரானது' என்பதை நிரூபிக்க, மனிதத்தை கொல்லும் மனிதர்கள்(?).

தடை சரியே - சோ விளக்கம்!

அகில உலக அரசியல் ஞானியும், 'தலை'சிறந்த பத்திரிக்கையாளரும், முன்னாள் கமெடி நடிகருமான சோ, 'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று கருணாநிதி அரசு கொண்டுவந்த அவசர சட்ட திருத்தத்திற்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருப்பது 'சரியே' என்பதை தனது வழமையான வாதங்களுடன் முன் வைத்தார்.

இன்று தனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்த சோ வை குறிப்பிட்ட 'சில' பத்திரிக்கை நிருபர்கள் மட்டும் சூழ்ந்து கொண்டு இடைக்கால தடை குறித்து கேட்டனர்.

"In fact, சுப்ரீம் கோர்ட் பிராமனரல்லாத பிற ஹிந்து இளைஞர்களை காப்பாற்றவே இப்படியோர் இடைக்கால தடையை கொடுத்திருக்கிறதா நான் நினைக்கிறேன்" என்று கூறியதும் செய்தியாளர்கள் என்ன சொல்கிறார் என்பது புரியாமல் 'ஙே...' என 'முழித்தனர்'.

மேற்கொண்டு ஏதும் கேட்காமல் முழித்த நிருபர்களை, அதைவிட பயங்கரமாக முழித்தபடியே சோ கூறினார், "இப்போ, இடைக்கால தடை விதிக்காம, வழக்கு நடந்து, இந்த அவசர சட்ட திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது அப்டீன்னு இறுதி தீர்ப்பு வருதுன்னு வெச்சுக்குவோம், அதுக்குள்ள கருணாநிதி ரோட்டுல, (சற்றே நிறுத்தி) ஈரோட்டுல இல்ல (நிருபர்கள் 'கெக்கே பிக்கே' என சிரிக்கின்றனர்) போர வர்றவங்களை அரசியல் காரணத்துக்காக ஆசை காண்பிச்சு அர்ச்சகர் ஆக்கியிருந்தார்னா, அவங்களோட கதி?"

உணர்ச்சி வயப்பட்ட தினமலம் ரிப்போர்ட்டர் "பேஷ், பேஷ்," என்ற படி கை தட்டுகிறார். கூடத்திலிருக்கும் 'ஒருவர்' குணா கமல் மாதிரி கைகளை சோ இருக்கும் திசை நோக்கி நீட்டியபடி இடம் வலமாக ஆட ஆரம்பிக்கிறார்) கை தட்டலையும், குணா டான்ஸையும் உள்ளுக்குள் ரசித்தபடியேயும், வெளிக்கு அலட்சியம் செய்த படி தன் கருத்தை கூறுகிறார் அரசியல் மேதை 'சோ', "சுப்ரீம் கோர்ட், ஹரிஜன, மற்ற ஜாதி ஹிந்து இளைஞர்களை கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சியிலேந்து காப்பாத்திருக்குன்னு தான் நான் நினைக்கிறேன். அதுக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு மொத்த தமிழ் நாடும் நன்றி கடன் பட்டிருக்கு."

'கருணாநிதி, சூழ்ச்சி' இரண்டையும் ஒரே வாகியத்தில் கேட்டதால் சகஜ நிலைக்கு திரும்பிய தினமலம் நிருபர், "இந்த சட்ட திருத்தம் தேவையா? ஹிந்து அமைப்புகள் வேறு அனைவரும் அர்ச்சகர் ஆக ஆதரவு தெரிவிக்கின்றதே? இதனால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?" என எடுத்து கொடுக்கிறார்.

('தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?' என்பதை மிகுந்த கவலையுடனே கேட்கிறார் தினமலம் நிருபர். அதை உள்வாங்கியபடி -மேதையோன்னோ?) சோ சொல்கிறார், "கருணாநிதியும் ஒன்னை சொல்றார், அதை ஹிந்து இயக்கமும் ஆதரிக்குதுன்னா அதுலேந்து என்ன தெரியுது?" என கேட்டு நிறுத்தி முழு வீச்சில் முழித்தார் சோ. (கூட்டத்திலிருந்து 'ஒருவர்' "என்ன தீர்க்கமான பார்வை! பகவானே" என்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்)

பேச்சற்று இருந்த நிருபர்களிடம், "இந்த சட்டமே தமிழர்களுக்கு எதிரானதுன்றது புரியல்ல?" என்று கேட்ட சோ, இப்பொது நிருபர்கள் தன்னை விட பயங்கரமாக முழிப்பதை பார்த்து சுதாரித்து, உடனடியாக தொடர்ந்தார், "இப்போ தமிழ்நாட்டுல எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சுட்டு அமெரிக்கா, சிங்கப்பூர் (அவர் சொன்ன மற்ற ஊர்கள்லாம் தினமலம் வாசகர்களுக்கு - அதன் நிரூபர்/ஆசிரியருக்கும் கூடத்தான்- புரியாது) இல்லேன்னா டைடல் பார்க்குல வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்குறது கருணாநிதிக்கு புடிக்கல. அதான், சம்ஸ்கிருதம் படிச்சுட்டு (கருணாநிதி எப்போ சம்ஸ்காரம் பண்ண சொன்னார்? சாரி, சமஸ்கிருதம் படிக்க சொன்னார்னு யாரும் கேக்கல) கோவில்ல மணியாட்டி தட்டுல காசு விழுமான்னு பாத்துக்கிட்டு இருக்கட்டும்னு கெட்ட எண்ணத்துல இப்படியொரு சட்டம் கொண்டுவர பாக்குறார். "

மேர்கொண்டு ஏதும் கேள்வி கேட்கும் நிலையில் நிருபர்கள் இல்லையென்பதை உணர்ந்த சோ தொடர்கிறார், "கோவில்ல பூஜை பண்ணா என்ன கிடைக்கும்? அரை தேங்கா மூடியும், மீந்து போன அக்கார வடிசலும்தான். ('இதுக்கா இவ்ளே அடிச்சுக்கரா இவா' ந்னெல்லாம் யாரும் கேட்கல) பரம்பரையா பூஜை செய்கிறவங்களே அதை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகும்போது, மத்தவங்களை இதுல இழுத்துவிட கருணாநிதிக்கு என்னா காரணம்?" அங்கிருப்போர் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பது தெரிந்தே தொடர்கிறார் சோ.

"கருணாநிதியோட குடும்ப அரசியல் தான் எல்லாத்துக்கும் காரணம். அவரோட சேர்ந்த ராமதாஸ் கூட கருணாநிதியால தான் கெட்டார். ராஜாஜி (பெயர் கேட்டதுமே கூட்டத்திலிருந்து 'ஒருவர்', "சரணம், சரணம்") நெனைச்சிருந்தா அவர் மகன்களை பிரதமாரக்கியிருந்திருக்கலாம். ஆனால், (சோவின் குரலில் ஏமாற்றம் தெரிகிறது. கூட்டத்திலிருக்கும் 'ஒருவர்' கண்ணீர் வடிக்கிறார்) ராஜாஜி அதை செய்யல. ஏன்னா அவர்லாம் மகோன்னதமான தலைவர். (கூட்டத்திலிருக்கும் 'ஒருவர்' சாமியாடும் நிலைக்கு போய், அரசியல் மேதை 'மகான்' சோவின் பேட்டிக்கு இடையூராகுமே என்று தன்னை கட்டுப்படுத்திக்கொள்கிறார்) ராமதாஸும், கருணாநிதியும், மகனையும், பேரனையும் மத்திய மந்திரியாக்கி அழகு பாக்குறதுக்கு தமிழ் நாட்டோட நலனை பாழாக்குறாங்க. இந்தி படிக்காதேன்னு சொல்லி எல்லாரையும் கெடுத்துட்டு, பேரனை மட்டும் ஹிந்தி படிக்க வெச்சு மத்திய மந்திரியாக்கிட்டார். (பேரனுக்கு ஹிந்தி தெரியாதுன்னு கருணாநிதி சொல்லிட்டாரேன்னு எல்லாம் சொல்ல அங்கே யாரும் இல்ல) இவங்களோட சுய நலத்தை ஜனங்கள் புரிஞ்சுக்கனும்."

"கருணாநிதி பெரியாரையும் மதிக்கலேன்னு இதுலேருந்து தெரியுது. (நக்கலாக சிரித்தபடி) கடவுள் இல்லை, கோயிலுக்கு போகாதேன்னு சொன்ன பெரியாரோட சீடர் கோயில்ல அர்ச்சகரா யார் ஆகுரதுன்னு கவலை படலாமா?" (மீண்டும் கைதட்டல். 'ஒருவர்' விசிலடித்து நடனமாட ஆரம்பித்து, பின்னர் தன்னிலை மீண்டும் உணர்ந்தவராய் நிறுத்துகிறார்.)

பேச்சற்று இருந்த நிருபர்களிடம் மேற்கொண்டு பேசுகிறார் சோ, "அதனால தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் அரசியல் வாதிகளோட பேச்சை கேட்டு அர்ச்சகர் ஆகி எதிர்காலத்தை கெடுத்துக்காம, ஹிந்தி படிச்சு பீகார், உ.பி, உத்திராஞ்சல்ல இருக்கிற வேலை வாய்ப்புகளையும், கம்ப்யூட்டருக்குன்னே உருவான சம்ஸ்கிருதத்தை படிச்சு அமெரிக்காவிலயும் வெலை பார்க்கனும்னு தான் நான் விரும்பறேன். அப்படியே தான் சுப்ரீம் கோர்ட்டும் விரும்புதுன்னு இந்த தடை மூலமா நான் புரிஞ்சுக்கறேன். அதனால இளைஞர்களை கெடுக்கும் இந்த சட்டத்தை தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தரும் எதுக்கனும்".

நிருபர்கள், தங்கள் கொள்கையையொட்டிய ஒரு பேட்டி கிடைத்த திருப்தியிலும், சந்தியா வந்தனம் பண்ண நேரம் நெருங்கிவிட்டதே என்பதாஅலும், பேட்டியை முடித்து கிளம்ப ஆயத்தமானார்கள்.

அதே நேரம் சோவும், "திராவிட அரசியலின் இன்னொரு கோமாளித்தனம், சுப்ரீம் கோர்ட்டினால் மறுபடியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது." என்று பண்ச் கொடுத்து பேட்டியை முடித்த படி imported சொகுசு ஊர்தியில் ஏறி மறைந்தார்.

காரில் ஏறி போன பின்பும் கூட சோவின் தலைக்கு பின் இருந்த ஒளிவட்டம் அங்கேயே இப்போதும் இருப்பதை கண்ட கூட்டத்திலிருந்த 'ஒருவர்' (சோ பக்தர்), சாஸ்டாங்கமாக சோ நின்ற இடத்தில் விழுந்து நமஸ்கரித்தார். நமஸ்கரித்து எழுந்த பின்புதான் புரிந்தது அது ஒளி வட்டமல்ல, காலை முதல் மாலை வரை மட்டுமே எறியும் சென்னை மாநகராட்சி மின் விளக்கு ஏற்படுத்திய காட்சிப்பிழை எனபது. இருந்தாலும் அந்த விளக்கை அந்த நேரத்தில் சோவின் தலைக்கு பின்னால் வைத்து, அந்த தலையையும் மொட்டையாய் வைத்து, அந்த ஒளி அதில் பிரதிபலிக்க செய்து, தனக்கு சோவின் மேன்மையை விளக்கியது 'உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன்' தான் என தனக்கு தானே சொன்னபடி கிளம்பினார் - ஒரு பதிவு போட.

அது பற்றி பின்னர் பேசுவேன்!

ஹா.ஹா. அனைவரும் அர்ச்சகர் சுப்ரீம் கோர்ட் ஆப்பு!

ஓகே, இடைக்கால ஆப்பு.

இட ஒதுக்கீடு போன்ற இந்திய தேசிய நலனுக்கு எதிரான திட்டங்கள் தடுக்க ஒரு அமைப்பு இருப்பது, நம் நாட்டின் எதிர்காலத்தின் மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாயுள்ளது.

இதை 60வது சுதந்திர தினம் கொண்டாடும் இந்தியர்களுக்கு, இந்திய நீதி துரைகளின் பரிசாக எண்ணி புளங்காகிதமடைவோம்!

காட்டுமிராண்டி சட்டமியற்றும் கருணாநிதி, ஏற்கனவே ஒரு முறை, சமீபத்தில் 1972-ல் இதே சட்டத்தை கொண்டு வந்த போது, இதே உச்ச நீதிமன்றம் அதை தடை செய்து நீதி யை காப்பாற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் பாவம் கருணாநிதிக்கு தான் ஞாபக மறதி!

சமூகநீதி என்ற பெயரில் மக்களை குழப்பும் கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றார் இனியும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாளை இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

ஜெய் ஹிந்த்!

பி.கு: தமிழக அரசின் 'அனைவரும் அர்ச்சக்ர் ஆகலாம்' சட்டத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மனு செய்தது, 'ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம்' என்ற பிராமனர்கள் அல்லாத அமைப்பு என்பதை இங்கே தெரிந்துகொள்ளவும்.

அசைவ இந்தியாவில் பட்டினி இன்னும் போகலே!

இந்தியாவில் 35% பேர் கடந்த ஆண்டில் ஒரு முறையாவது, அவர்களோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினரோ, சாப்பாட்டு கிடைக்காமல் இருந்துள்ளனர்.

இதில் 7% பேருக்கு பட்டினி கிடக்க அடிக்கடி நேருகிறது.

தாழ்த்தப்பட்ட, பழ்ங்குடியின மக்களுடன், கிராம நகர வேறுபாடின்றி ஏழைமக்களிடமே பட்டினி பரவலாக உள்ளது.

சரி சாப்பிடுர மக்கள் எப்படியான சாப்பாட்டை சாப்பிடுறாங்க?

அசைவமுண்டு, சைவமும் உண்டு

இந்தியாவில், 60% பேர் மாமிச பட்சினிகள் என்பது ஒரு சுவாரசியமான தகவல். 31% சைவமும், 9% பேர் முட்டை அடிக்கும் சைவர்களாம்.

பிராமணர்களில் 55% மட்டுமே சைவம். (அப்ப மீதி?) கிறித்துவர்களில் 8% மும், முஸ்லீமகள் 3% மும் சைவர்கள்.


13% பேர் குவாட்டர் கோவிந்துகளாம். குடி பழக்கம் 'மிக' அதிகரித்துள்ளதாக 40%மும், கொஞ்சூண்டு தான்னு 24%மும், கொறைஞ்சு போச்சுன்னு 13%மும் கூறுகிறார்கள். ஆனால் (மருத்துவர் தமிழ்குடிதாங்கி மகிழும்படி) 73% பேர் மதுவிலக்கு வேண்டும் என விரும்புகிறார்களாம்.

மேற்படி தகவல்கள் ஹிந்து, CNN-IBN எடுத்த சர்வேயில் வெளிவந்துள்ளன. மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு சுட்டி
நன்றி: The Hindu

இந்தியாவில் 'கர்னல்' கருணா!

கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்.

புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன.

ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம்.

முஸ்லீம்கள் நலன் முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்.

அகதிகளாக மூதூரைவிட்டு வெளியேறிய முஸ்லீம் தமிழர்களை முன்னிட்டு, விடுதலை புலிகள் போர் நிறுத்தம், தங்கள் பழைய நிலைக்கு திரும்ப ஒத்துக்கொண்டுள்ளனர்.சிங்கள இராணுவமும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது (வேறு வழி?).

தகவல் மூலம் http://thatstamil.oneindia.in/news/2006/08/05/ltte.html

இது உண்மையாயின், சமீப காலத்தில் உலகளவில் நடந்த வியக்கத்தக்க 'இராஜியநகர்வு' இதுவென்றே நினைக்கிறேன்.

நிச்சயமானதும் மேலும் எழுதுகிறேன்.

Kudos to LTTE :))))))))))))))))))))))))))))))))))))

முஸ்லீம்கள் நலன் முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்.

அகதிகளாக மூதூரைவிட்டு வெளியேறிய முஸ்லீம் தமிழர்களை முன்னிட்டு, விடுதலை புலிகள் போர் நிறுத்தம், தங்கள் பழைய நிலைக்கு திரும்ப ஒத்துக்கொண்டுள்ளனர்.
சிங்கள இராணுவமும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது (வேறு வழி)
தகவல் மூலம்: http://thatstamil.oneindia.in/news/2006/08/05/ltte.html

இது உண்மையாயின், சமீப காலத்தில் நடந்த வியக்கத்தக்க 'இராஜியநகர்வு' இதுவென்றே நினைக்கிறேன்.

நிச்சயமானதும் மேலும் எழுதுகிறேன்.

Kudos to LTTE :))))))))))))))))))))))))))))))))))))

தமிழ்மணத்திற்கு பெட்டிஷன்...

ஹிஹி...

ஏன்னா மூனு பதிவு போட்டப்புறம் கூட மூனு போடு மூனு போடூனா எங்கன போடுறது?

சரி எப்பொ நாம்போட்ட மூனும் அவுகளுக்கு தென்படுதோ அப்ப சேத்துக்கங்கையா என்னையும்....

வணக்கத்துடன்...
விசும்பலும். :(

தமிழின் முதல் வலைப்பதிவு......

எது தமிழின் முதல் வலைப்பதிவு?

தமிழில் பதியப்பட்ட முதல் பதிவின் சுத்தியை தமிழ்மணத்தை சுத்திச்சுத்தி தேடிப்பார்த்தேன், தகவலே இல்லை.

யாராவது அதன் சுட்டியை தரவியலுமா?

நன்றி,
வணக்கத்துடன்....

தமிழ்மணமும், தமிழர்களும்...

தமிழ்மணம்...உயர்திரு. காசி அவர்களுக்கும் + உடன் உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

இப்படி ஒரு இடம் இருப்பதையே மறைச்சுப்பிட்டாங்களே மக்கா...?

இவுக (தமிழ்மணம்) இல்லேன்னா, நானெல்லா இங்கே வாரதெப்படி, 'தமிழ்' வளக்குதெப்படி? தட்டி தடவி கூகில் மட்டும் கான்பிச்சி கொடுக்கலைனா தமிழ் வளக்க 'என் பங்களிப்பு' இல்லாமலே போயிருக்குமே பங்காளி! நல்லவேலை, தமிழ் வளர்ச்சி வரலாற்றில் என் பெயரை(யும்தான்) பதிக்க உதவிய தமிழ்மணம் குழுவினருக்கு....

அய்யா...நன்றி...நன்றி..நன்றி!

அதைவிட 'அதிசயம்' என்னன்னா, காசு வாங்கிட்டு தமிழை 'காட்டுற', அனுப்புற மேற்படி பத்திரிக்கைகளைவிட 'ஆழமான' கருத்துக்களை வைக்கும் 'சக'(ஆயிடோம்ல) வலைப்பதிவர்கள் தான். என்ங்கிருந்துயா இப்பிடியெல்லாம் சிந்திக்கிறீங்க? படிக்க படிக்க, படிச்சிக்கிட்டே இருக்கோனும்னு தோனுதுயா. (டாலர் கனவு வரர வரையில)

அதனால உங்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி..நன்றி!

வணக்கத்துடன்...முதல் வணக்கம்.

தமிழ் வாசிக்கும் ஆசையில் இணையத்தில் அலைந்தபோது கிடைத்த தமிழ் வலைப்பதிவுகளின் கடலில் வசிக்கப்போகும் ஒரு சிப்பி.

முத்தும் கிடைக்கலாம்...சுன்னாம்பாகவும் ஆகலாம்.

வருகைக்கு (வறவேற்புக்கும் நன்றி!)

வணக்க்த்துடன்... அன்பும் :)